ஓடாத படங்களுக்கு வெற்றி விழா! - ஐசரி கணேஷை தாக்கிய பூச்சி முருகன்
Monday November-25 2019

வேல்ஸ் பல்களைக்கழகத்தின் தலைவர் ஐசரி கே.கணேஷ், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் திரைப்படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் வருகிறார். இந்த நிறுவனம் இந்த ஆண்டு தயாரித்த ‘எல்.கே.ஜி’, ‘கோமாளி’, ‘பப்பி’ ஆகிய மூன்று படங்களும் வெற்றி பெற்றதை தொடர்ந்து நேற்று சென்னை பிரம்மாண்டமான வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

 

இதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, மூன்று படங்களின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வெற்றி பரிசை வழங்கினார்.

 

இந்த நிலையில், வேல்ஸ் பிலிம் நிறுவனத்தின் வெற்றி விழாவை விமர்சித்திருக்கும் திமுக பிரமுகரும் நடிகர் சங்க துணை தலைவருமான பூச்சி முருகன், ஆள்பவர்களை குறிவிக்க ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுவதாக விமர்சித்துள்ளார்.

 

Vetri Vizha

 

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்று சொன்னவர் தலைவர் கலைஞர். ஆனால் சிலரோ ஓடாத படங்களுக்கு வெற்றி விழா என்ற பெயரில் ஆள்பவர்களை பல்வேறு வகைகளில் குளிர்விக்க விழா எடுப்பதன் மூலம் முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ் திரைத்துறைக்கு செய்த அளப்பரிய உதவிகளை இருட்டடிப்பு செய்ய முயல்கிறார்கள். ஆள்பவர்களை காக்கா பிடிப்பதற்காக கட்சி மாறுவதையே தனது கொள்கையாக வைத்து இருப்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

 

ஒட்டுமொத்த திரையுலகுக்கும், சின்னத்திரை கலைஞர்களுக்கும், சென்னை அருகே பையனூரில் வீடு கட்ட இடம் வழங்கி, இருண்டு கிடந்த திரையுலகினர் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்தான்... ஆனால் நயவஞ்சகமாக ஆட்சியை பிடிக்கும்போதெல்லாம் திரைப்பட துறையை நசுக்குவதையே குறிக்கோளாக கொண்டு இருப்பவர்கள் யார் என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரியும். இப்போது கூட தமிழ் சினிமாவின் நலனை கெடுக்கும் விதமாக முக்கிய சங்கங்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருபவர்கள் யார் என்பதும் திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் மரத்தையே வெட்டும் கோடாலிகள் போல திரைத்துறையிலேயே இருந்துகொண்டு அந்த துறையை அடகு வைக்க திட்டமிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவும் விடிவும் வரும். அதுவரை பொறுத்திருப்போம்!” என்று தெரிவித்துள்ளார்.

Related News

5916

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

Recent Gallery