அறிமுக ஹீரோ உதய் தயாரித்து நடித்திருக்கும் ‘உதய்’ படத்தில் ஹீரோயினாக லீமா நடித்திருக்கிறார். தமிழ் செல்வன் இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதில், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே.ராஜன், பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, பி.ஆர்.ஓ சங்க செயலாளர் பெருதுளசி பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் கே.ராஜான் பேசுகையில், சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. இதற்கு தயாரிப்பாளர் சங்கமும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஒருத்தன் நடிகராக இருந்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கிறார். அவன் யோக்கிய பய.
அவன் நடித்த ‘அயோக்யா’ படம் ரூ.9 கோடி நஷ்ட்டம், ‘ஆக்ஷன்’ படம் 16 கோடி நஷ்ட்டம். தயாரிப்பாளரை தவிக்க விட்டுள்ளார்.
‘உதய்’ படத்தின் ஹீரோ உதய் லிப் கிஸ் அடித்துள்ளார். முன்பெல்லாம் சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி படங்களில் முத்தக் காட்சிகள் இருந்தால் அதன் பின்னர் கிளி முத்தமிடுவது போல காட்டப்படும்.
ரஜினி விரசமில்லாத காட்சிகளில் நடித்தார். அதனால் தான் அவர் படத்தை குடும்பத்துடன் பார்த்தார்கள். ஆனால், கமல் அப்படியில்லை. லிப் லாக் நிறையவே அடித்தார். தனுஷும் அதுபோல தான். நாயகியை இழுத்து வைத்து கிஸ் அடிப்பார். அதுபோன்ற காட்சிகளை ஹீரோக்கள் தவிர்க்க வேண்டும். அப்போது தான் பேமிலி அட்டியன் தியேட்டருக்கு வருவாங்க.” என்று பேசினார்.

‘உதய்’ படத்திலும் லிப் டூ லிப் கிஸ் இருக்கிறதாம். இந்த காட்சியை எடுக்கும் போது ஹீரோ உதய் தயக்கம் காட்ட, ஹீரோயின் லீம உடனே ஹீரோவை கட்டி அனைத்து முத்தம் கொடுத்துவிட்டாராம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...