Latest News :

நோ சொன்ன விஜய், ஓகே சொன்ன ரஜினிகாந்த்! - சந்தோஷத்தில் கல்வியாளர்
Wednesday November-27 2019

விஜய் நடிக்கும் படங்கள் சில எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், வசூல் ரீதியாக தொடர்ந்து மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது. 

 

இதன் காரணமாக விஜயை வைத்து படம் தயாரிக்க பல முன்னணி தயாரிப்பாளர்களும், தொழிலதிபர்களும் முயற்சித்து வருகிறார்கள்.

 

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும், இதில் விஜய், விஜய் சேதுபதி மோதும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இப்படத்தை விஜயின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். பள்ளி, ஓட்டல், லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வரும் சேவியர் பிரிட்டோ, வேல்ஸ் பல்கலைக்கழக தலைவரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கே.கணேஷுடன் இணைந்து விஜயின் படத்தை தயாரிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அது விஜயின் 64 வது படமாக இருக்கும், என்றும் கூறப்பட்டது.

 

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த விஜய், சேவியர் பிரிட்டோ மட்டும் தனியாக தயாரிக்க வேண்டும் என்றும், உதவிக்கு தனது உதவியாளரை வைத்துக் கொள்ள வேண்டும், என்று நிபந்தனை விதித்தாராம். அதனால் தான் சேவியர் பிரிட்டோ மட்டுமே ‘தளபதி 64’ படத்தை தயாரிக்கிறாராம்.

 

விஜய் படத்தை தயாரிப்பதற்காக ஆர்வமாக இருந்த ஐசரி கணேஷுக்கு, விஜயின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில், தற்போது அவர் ரஜினி படத்தை தயாரிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

 

Isari Ganesh

 

’தர்பார்’ படத்தை முடித்திருக்கும் ரஜினிகாந்த், அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இப்படம் ரஜினியின் 168 வது படமாக உருவாகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்குப் பிறகு ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சமீபத்தில் நடைபெற்ற வேல்ஸ் வெற்றி விழா நிகழ்ச்சியிலேயே ரஜினி பட அறிவிப்பை ஐசரி கணேஷ், வெளியிடுவதாக இருந்தாராம். ஆனால், ரஜினிகாந்த் தான் அவசரப்பட வேண்டாம், தனது 168 வது படம் முடியும் தருவாயில் அறிவித்துக் கொள்ளலாம், என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

எப்படியோ ஐசரிக்கு, விஜய் நோ சொன்னாலும், ரஜினி ஓகே சொல்லியிருப்பதால், வேல்ஸ் ஏரியாவே குஷியில் இருக்கிறதாம்.

Related News

5922

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery