‘ராஜா ராணி’ என்ற சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக இருந்ததோடு, நிஜ வாழ்க்கையிலும் காதலிக்க தொடங்கினார்கள். முதலில் காதலை மறுத்தாலும் பிறகு வெளிப்படையாக அறிவித்தார்கள்.
ஆல்யா மானசாவின் குடும்பத்தில் அவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம், சஞ்சீவ் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பது தான். அதே சமயம், சஞ்சீவின் குடும்பம் இதற்கு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, ஆல்யா மானசா - சஞ்சீவ் திருமணம் எளிமையான முறையில் நடந்தது.
திருமணத்திற்குப் பிறகு ஆல்யா மானசாவின் அப்பா மற்றும் சகோதரி அவரிடம் பேசினாலும், அவரது அம்மா மட்டும் பேசவில்லையாம். அம்மா என்றால் தனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால், தனது திருமணத்தால் அவர் தன்னிடம் பல மாதங்களாக பேசாமல் இருப்பதை எண்ணி ஆல்யா மானசா வருந்துகிறாராம்.
இந்த நிலையில், ஆல்யா மானசா கர்ப்பமடைந்திருக்கிறார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் சஞ்சீவ் கூறியதோடு, தனது மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
இந்த விஷயத்தால் சஞ்சீவ் சந்தோஷமாக இருந்தாலும், ஆல்யா மானசா வருத்தமாகவே இருக்கிறாராம். காரணம் குழந்தை பிறந்ததும் தனது அம்மா கையில் தான் முதலில் கொடுக்க வேண்டும், என்ற ஆசையில் ஆல்யா மானசா இருந்தாராம். ஆனால், அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயம் அறிந்த பிறகு கூட அவரது அம்மாவின் கோபம் தனியவில்லையாம். இதனால் தான் ஆல்யா மானசா வருத்தத்தில் இருக்கிறாராம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...