கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தம்பி’ படத்தை ‘பாபநாசம்’ பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கிறார். திரில்லர் பேமிலி டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தில் ஜோதிகா அக்காவாகவும், கார்த்தி தம்பியாகவும் நடிக்கிறார். இவர்களது அப்பாவாக சத்யராஜ் நடிக்க, அம்மாவாக சீதா நடித்திருக்கிறார்.
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘தம்பி’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை எஸ்.டி.சி (SDC) பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
‘தொரட்டி’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. ‘காவியன்’ ஆகியப் படங்களை வெளியிட்டிருக்கும் எஸ்.டி.சி பிக்சர்ஸ் நிறுவனம் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’, திரிஷாவின் ‘கர்ஜனை’ ஆகியப் படங்களை வெளியிட இருக்கிறது.
இதற்கிடையே ‘தம்பி’ படம் நன்றாக வந்திருப்பதை அறிந்த இந்நிறுவனம், அப்படத்தை வாங்கி வெளியிட முடிவு செய்தது. இதையடுத்து படத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்ட போது பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட, அத்தனை நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு படத்தை கைப்பற்றியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி விநியோக நிறுவனமாக உருவெடுத்திருக்கும் எஸ்.டி.சி பிக்சர்ஸ், வரும் நவம்பர் 30 ஆம் தேதி ‘தம்பி’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வை நடத்த திட்டமிட்டிருப்பதோடு, படத்தை வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியிடவும் முடிவு செய்துள்ளது.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...