பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமான கவின், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரிய ரசிகர்கள் வட்டத்தை பெற்றுவிட்டார். பிக் பாஸ் சீசன் 3 யின் டைடில் வின்னராக கவின் வருவார், என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று ரூ.5 லட்சத்தை பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து விலகிவிடார்.
போட்டியில் இருந்து கவின் விலகினாலும், அவருக்கான மவுசு குறையவே இல்லை. பிக் பாஸ் போட்டியால் கவினுக்கு பல ஆர்மி குரூப்புகள் உருவானதோடு, ஏராளமான ரசிகர்களும் அவரை பின் தொடர ஆரம்பித்தார்கள்.
கவின் என்றாலே லொஸ்லியா மற்றும் காதல், என்ற அடையாளமும் அவருடன் ஒட்டிக் கொள்ள, கவின் குறித்து எதாவது தகவல் வெளியானலே அது லொஸ்லியா பற்றிய காதல் தகவலாகவே இருந்தது.
இந்த நிலையில், கவின் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது, கவினின் ஆர்மிகள் கொண்டாடக்கூடிய தகவல் என்பது தான் கூடுதல் சிறப்பு.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த போட்டியாளர்கள் பலருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், கவினும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். அப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இத்துடன், சிவகார்த்திகேயன் நடிக்கும் இன்னும் தலைப்பு வைக்கப்படாத, ‘எஸ்.கே 18’ என்று அழைக்கும் படத்திலும் கவின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறாராம். ஆக, கவினுக்கு இரண்டு லட்டுகள் கிடைத்துவிட்டது.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...