தீபாவளியை குறி வைக்கும் அஜித்!
Thursday November-28 2019

‘விஸ்வாசம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என இரண்டு பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்திருக்கும் அஜித்தின் அடுத்தப் படம் ‘வலிமை’. இப்படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றாலும் இன்று வரை படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இதற்கு காரணம், அஜித் தன்னை உடல் ரீதியாக தயாரிப்படுத்திக் கொள்வதற்காக கால அவகாசம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

அதே சமயம், இயக்குநர் வினோத்தும் திரைக்கதையை மெருகேற்றுவதற்காக இரண்டு மாதம் காலம் அவகாசம் கேட்டிருக்கிறாராம். இதனால் தான் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஆவதாக கூறப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் மாதம் மத்தியில் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், படத்தை 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அஜித்தின் படம் தீபாவளிக்கு வெளியாகி சுமார் 5 வருடங்கள் ஆன நிலையில், ‘வலிமை’ மூலம் அஜித் தீபாவளிக்கு குறி வைத்திருக்கிறார்.

 

அதே சமயம், படப்பிடிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பிளான் போட்டது போல் நடந்தால் தான் தீபாவளியன்று ‘வலிமை’ படத்தை வெளியிட முடியும் என்பதால், அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளையும் தற்போதே தொடங்கிவிட்டார்களாம்.

Related News

5929

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

Recent Gallery