நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும், வலிமையான கதாபாத்திரங்களிலும் நடிக்கும் நடிகர்களில் ஒருவரான பாபி சிம்ஹா, ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. எஸ்.ஆர்.டி எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ரமணன் புருஷோத்தமன் இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோயினாக காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார்.
ராஜேஷ் முருகேசன் இசையமைக்கும் இப்படத்திற்கு சில்வா ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, சுனில் எஸ்.கே ஒளிப்பதிவு செய்கிறார். ‘பேட்ட’, ‘இறைவி’, ‘ஜிகதண்டா’ போன்ற படங்களின் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். நந்தினி என்.கே ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமான முறையில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...