விரதம் இருக்கும் நயன்தாரா, இப்படி செய்யலாமா? - சாமி கண்ணை குத்தப்போகுது
Sunday December-01 2019

தென்னிந்தியாவின் முன்னணி நடிகை, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை பெற்றிருக்கும் நயன்தாராவுக்கு வயது ஆக...ஆக...தான், மவுசும் அதிகரித்து வருகிறது. அவரை ஹீரோயினாக வைத்து படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்கள், அவர் எத்தனை கோடிகளை சம்பளமாக கேட்டாலும், கொட்டி கொடுக்க தயாராக இருக்கிறார்களாம்.

 

அந்த வகையில், வேல்ஸ் பல்கலைக்கழ தலைவர் ஐசரி கே.கணேஷ், இதுவரை நயன்தாராவுக்கு யாரும் கொடுக்காத தொகையை சம்பளமாக கொடுத்து, தான் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

‘எல்.கே.ஜி’ படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி, கதை, வசனம் எழுதுவதோடு, நடித்து இயக்கவும் செய்யும் இப்படத்தில் அவருக்கு நயன் ஜோடியா அல்லது படத்தின் முதன்மை கதாப்பாத்திரமா என்பது தெரியவில்லை. 

 

இதற்கிடையே, இப்படத்திற்காக நயன்தாரா விரதம் மேற்கொண்டிருப்பதாகவும், இதற்கு முன்பு தெலுங்குப் படமான ‘ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ படத்திற்காக அவர் விரதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு வெளியான அப்படத்திற்குப் பிறகு சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு நயன்தாரா, மீண்டும் விரதம் இருந்து ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

 

Nayanthara in Sri Rama Rajjiyam

 

இந்த நிலையில், ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் தொடங்கியது. ஆனால், இதில் நயன்தாரா பங்கேற்கவில்லை. படத்தின் முதல்கட்டப் பிடிப்பிலேயே நயன்தாரா சம்மந்தமான காட்சிகள் படமாக்கப்பட இருந்தாலும், படப்பிடிப்பு தொடங்கிய நாளில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. அவர் விரைவில் படப்பிடிப்பில் இணைவார், என்று படக்குழு அறிவித்துள்ளது.

 

மேலும், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு பக்திப் படம் என்பதால், கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தியிருக்கிறார்கள். அந்த பூஜைக்கு பிறகே படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. 

 

Mookuthi Amman

 

இப்படத்தில் அம்மனாக நடிப்பதால் விரதம் இருப்பதாக கூறும் நயன்தாரா, அதே அம்மனுக்காக நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் பங்கேற்காமல், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் உல்லாசமாக ஊர் சுற்றி வருகிறார். அந்த உல்லாச பயணம் முடிந்த கையோடு படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள இருப்பவர், தான் நடிக்கும் எந்த படங்களின் விழாக்களிலும் கலந்துக் கொள்வதில்லை என்ற பாலிஷி வைத்திருந்தாலும், பட விழாவாக இல்லாமல், தனது விரதத்தில் ஒரு பகுதியாக நினைத்து பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் பங்குக் கொண்டு இருக்கலாம்.

 

அதை நயன்தாராவும் செய்யவில்லை. படக்குழுவும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்திற்காக விரதம் இருப்பதாக பொய்யான தகவலை வெளியிட்டு படத்திற்கு விளம்பாம் தேடிக் கொள்வதை மட்டும் சரியாக செய்துவிட்டார்கள்.

 

Nayanthara and Vignesh Shivan

 

இப்படி, விரதம் என்ற பெயரில் விளம்பரம் தேடும் நயன்தாராவை சாமி கண்ண குத்தப் போகுது.

Related News

5937

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

Recent Gallery