கள்ளக் காதல் விவகாரம்! - பிரபல சீரியல் நடிகைக்கு அடி உதை
Monday December-02 2019

சினிமாவில் அவ்வபோது ஏற்படும் சர்ச்சையான விஷயங்களை விட சீரியல் உலகில் அதிகம் நிகழ்கிறது. அந்த வகையில், பிரபல சீரியல் நடிகர் மற்றும் நடிகை இடையிலான கள்ளக் காதல் விவகாரமும், அதனால் மற்றொரு சீரியல் நடிகை அடி உதை வாங்கிய சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

’தேவதையை கண்டேன்’ சீரியலில் நடித்து வரும் ஈஸ்வர் என்பவரும், ’வம்சம்’ சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமான நடிகை ஜெயஸ்ரீயும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

 

இந்த நிலையில், ’தேவதையை கண்டேன்’ சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை மகாலஷ்மியுடன் நெருக்கமாக பழகி வருவதோடு, அவரை திருமணம் செய்வதற்காக, நடிகை ஜெயஸ்ரீயிடம் விவாகரத்து கேட்டு ஈஸ்வர் சண்டைபோட்டு வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், ஜெயஸ்ரீயை தினமும் அடித்து சித்ரவதையும் செய்திருக்கிறார்.

 

இது தொடர்பாக நடிகை ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து நடிகர் ஈஸ்வரையும், அவரது அம்மாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். பிறகு அவரது அம்மாவை ஜாமீனில் விடுவித்த போலீசார், ஈஸ்வரை மட்டும் சிறையில் அடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

பல்வேறு சீரியல்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து பிரபலமான மகாலஷ்மி ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தைக்கு அம்மாவான நிலையில், தற்போது ஈஸ்வருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

 

Eshwar and Mahalakshmi

 

தனது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் மகள் வீட்டில் இருக்கும் போதே, அவர்கள் முன்பு நடிகை மகாலஷ்மியுடன் வீடியோ காலில் ஈஸ்வர் கொஞ்சி பேசுவாராம். மேலும், கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபடுபவர், மது பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார்.

 

ஈஸ்வர் வாங்கிய கடனுக்கு நடிகை ஜெயஸ்ரீ வட்டி கட்டி வந்ததோடு, சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தனது சொத்துக்களையும் இழந்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளாராம்.

Related News

5938

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

Recent Gallery