விளம்பரப் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஷாக்கடித்த எபெக்ட்டை கொடுத்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், சினிமாவிலும் ஹீரோவாக நடிக்க இருக்கும் தகவல் சுமார் ஒரு வருடமாக உலா வந்த நிலையில், தற்போது அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை, சரவணனை வைத்து விளம்பர படங்களை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகிறார்கள். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
இப்படத்திற்காக பல ஹீரோயின்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய இயக்குநர்கள் இறுதியாக கீத்திகா திவாரி என்றவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் மிஸ் இந்தியா பட்டம் வென்றவராம். மேலும், நாசர், பிரபு, விவேக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் துவக்க விழா நேற்று எளிமையான முறையில் சென்னை ஏ.வி.எம் ஸ்டியோவில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, இமலாயாஸ் மற்றும் சில வெளிநாடுகளிலும் நடக்க இருக்கிறதாம்.

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன், ஹீரோவாக நடிப்பதே எதிர்ப்பார்க்காத ஒன்றாக இருக்கும் நிலையில், இப்படத்தில் ”எதிர்பாராததை எதிர்ப்பார்க்கலாம்” என்று இயக்குநர்கள் கூறியிருக்கிறார்கள்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...