இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் தமிழ்ப் படங்கள் மூலம் சினிமாவில் நடிகர்களாக அறிமுகமாவது ஒரு பக்கம் இருக்க, தென்னிந்திய நடிகைகள் சிலர் கிரிக்கெட் வீரர்களை காதலிப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், சித்தார்த் நடித்த ‘உதயம் NH 4’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான அஷ்ரிதா ஷெட்டிக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கும் இன்று மும்பை திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இருவரும் காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில், இன்று இவருக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், திருமண புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

‘உதயம் NH 4’ படத்தை தொடர்ந்து ‘ஒரு கன்னியும் 3 களவாணியும்’, ‘இந்திரஜித்’, ‘நான் தான் சிவா’ ஆகியப் படங்களில் நடித்த அஷ்ரிதா ஷெட்டி, கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ளார்.
தற்போது, ரேண்டிகுண்டா, கருப்பன் ஆகிய படங்களை இயக்கிய பன்னீர் செல்வம் தனது மகனை ஹீரோவாக வைத்து இயக்கும் படத்தில் அஷ்ரிதா ஷெட்டி ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளாராம்.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...