சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மற்றும் நடிகை மகாலக்ஷ்மி இடையே உள்ள கள்ளத் தொடர்பு குறித்து செய்திகள் தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காகியுள்ளது. இந்த சம்பவத்தால் சீரியல் உலகே பெரும் பரபரப்பில் இருக்க, நடிகர் ஈஸ்வருக்கு மகாலக்ஷ்மியை தவிர மேலும் இரண்டு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக, அவரது மனைவி நடிகை ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
மேலும், ஈஸ்வர் குறித்து போலீஸில் புகார் அளித்தது ஜெயஸ்ரீ இல்லையாம். ஈஸ்வரால் தாக்கப்பட்டு மயக்க நிலையில் ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, மருத்துவமனை நிர்வாகம் தான் போலீஸில் புகார் அளித்திருக்கிறது.
இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து பேட்டி அளித்திருக்கும் ஜெயஸ்ரீ, மகாலக்ஷ்மியுடன் மட்டும் இல்லாமல் மேலும் இரண்டு பெண்களுடன் ஈஸ்வருக்கு தொடர்பு இருப்பதாகவும், அதில் ஒருவர் நடிகை என்றும் தெரிவித்துள்ளார்.
தனக்கு திருமணமானவுடன், குழந்தை பெற்றுக் கொள்ள ஈஸ்வர் குடும்பத்தார் வற்புறுத்தியதோடு, தனது டிவி கேரியரே முடிந்துப் போகும் விதமாக செய்துவிட்டார்கள், என்று குற்றம் சாட்டியிருக்கும் ஜெயஸ்ரீ, ஈஸ்வர் தன்னை பல முறை கொடுமை படுத்தி வந்ததோடு, தன்னைப் பற்றி வெளியில் தவறாக பேசி வருகிறாராம். மேலும், தனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி, விவாகரத்து கேட்டு தினமும் அடிப்பதாகவும், தெரிவித்துள்ளார்.
நடிகை ஜெயஸ்ரீ ஈஸ்வர் பற்றி, அடுக்கடுக்கான புகார்களை கூறி வர, இதற்கு ஈஸ்வர் மறுப்பு தெரிவிக்கும் முறை எப்படி இருக்கும், என்பது தான் பெரிய எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...