தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த மீனா, தென்னிந்திய டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துவிட்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் மீனா, மலையாள படங்களில் மீண்டும் கதையின் நாயகியாக நடிக்க தொடங்கினாலும், தமிழில் அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்கிடையே, தமிழில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிகை மீனா நடித்து வரும் நிலையில், ரஜினியின் 168 வது படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்த சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஜோதிகா மறுப்பு தெரிவித்துவிட்டதால், அவருக்கு பதில் மீனாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், கீர்த்தி சுரேஷும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் என்பதையும், சூரி நடிப்பதையும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில், விரைவில் மீனா நடிக்க இருப்பதையும் அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, ‘எஜமான்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததோடு, ‘வீரா’, ‘முத்து’ என மூன்று படங்களில் ரஜினியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...