பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் பேரில் பெரும் பிரபலமாகியுள்ள ஓவியாவை, நடிக்க வைக்க பல முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், விஜய் டிவி-யும் ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால், எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இனி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன், என்று ஓவிய உறுதியாக நின்றதால், விஜய் டிவி முயற்சியை கைவிட்டு விட்டது.
இதையடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் சிலர் ஓவியாவை தங்களது படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருள் சத்தமே இல்லாமல் ஓவியாவை தனக்கு ஜோடியாக்கிக் கொண்டுள்ளார்.
சமீபகாலமாக தனது நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடிக்க தொடங்கியுள்ள சரவணா ஸ்டோர் அதிபர் அருள், விரைவில் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு அவர் விளம்பரப் படங்களில் நடனமும் ஆட தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், புதிதாக தான் நடிக்க உள்ள விளம்பரம் படம் ஒன்றில் ஓவியாவுடன் ஜோடி போட்டு அருள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஹன்சிகா, தமன்னா ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்த அருள், ஓவியாவுடன் ஜோடியாக நடிப்பதற்கு பெரும் தொகையை அவருக்கு ஊதியமாக கொடுத்திருப்பதாகவும், அருள் - ஓவியா விளம்பரம் வரும் ஆயுத பூஜை முதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...