வரலட்சுமியை மிரட்டிய ‘களவாணி 2’ வில்லன்!
Thursday December-05 2019

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான துரை சுதாகரின் மென்மையான வில்லத்தனம் ரசிகர்களை கவர்ந்தது. மேலும், டெல்டா மாவட்ட மனிதராக, கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போனவருக்கு பாராட்டுக்களுடன், பல வாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது.

 

அந்த வகையில், வரலட்சுமி கதையின் நாயகியாக நடிக்கும் ‘டேனி’என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் துரை சுதாகர் நடித்திருக்கிறார்.

 

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி எழுதி இயக்குகிறார்.

 

சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படமான இப்படத்தில் வேலராமமூர்த்தி, சாயாஜி ஷிண்டே, அனிதா சம்பத், கவின், ராமர், பாலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தில் வரலட்சுமி போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு இணையான ஒரு வேடத்தில் துரை சுதாகரும் போலீஸாக நடித்திருப்பதோடு, வரலட்சுமியே மிரண்டு போகும் அளவுக்கு பர்பாமன்ஸ் செய்திருக்கிறாராம். அதே சமயம், அவர் படத்தில் வில்லனா அல்லது குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறாரா, என்பதை படக்குழு சஸ்பென்ஸாக வைத்திருக்க, அவரும் அந்த சஸ்பென்ஸை மெயிண்டெய்ன் பண்ணுகிறார்.

 

Durai Sudhakar

 

இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் 5 விதமாக வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், சமீபத்தில் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதை தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளியிட்டார்.

 

சினிமா மீது பேரார்வம் கொண்டிருக்கும் துரை சுதாகர், சின்ன வேடம் என்றாலும், தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டும் படமாக இருந்தால் நடிக்க ரெடியாகவே இருக்கிறாராம்.

 

அதன்படி இயக்குநர் எழில் உள்ளிட்ட பிரபல இயக்குநர்கள் பலரது படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் துரை சுதாகர், கோடம்பாக்கத்தின் கவனிக்கத்தக்க நடிகராக வேண்டும், என்ற கனவோடு தனது சினிமா பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.

 

Danny Poster

Related News

5952

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...

Recent Gallery