சின்னத்திரை தம்பதி நடிகர் ஈஸ்வர் - ஜெயஸ்ரீ ஆகியோரிடம் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை தான் தற்போது சின்னத்திரையின் ஹோட் டாப்பிக்காக உள்ளது. அதிலும் ஈஸ்வர் குறித்து ஜெயஸ்ரீ கூறும் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியாகியிருக்கும் ஈஸ்வர் அளித்திருக்கும் புகார் இன்னும் அதிகமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் ஈஸ்வர், குடி பழக்கம், சூதாட்டம் என்று இருப்பதோடு, தனது மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜெயஸ்ரீ குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியான ஈஸ்வர், தன்னை தொடர்பு கொண்டு பேசும் பத்திரிகையாளர்களிடம், ஜெயஸ்ரீ குறித்து பல பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்.
முதலாவதாக, நடிகை மகாலக்ஷ்மியும், தானும் இருக்கும் புகைப்படங்கள் வெளிநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எடுக்கப்பட்டவை, எங்களுக்குள் எந்த தவறான தொடர்பும் இல்லை, ஆனால் ஜெயஸ்ரீ நாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வைத்து, என்னை மிரட்டி பணம் பறிப்பதோடு, எனது பெற்றோரின் சொத்துக்களை அபகரிக்கவும் பார்க்கிறார், என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகை மகாலக்ஷ்மியின் கணவருடன் ஜெயஸ்ரீக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், அதை மறைக்கவே அவர் என் மீது தவறு இருப்பதாக காட்டுகிறார். மேலும், எனது பெற்றோரின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்துடன் அவர் இருக்கிறார், என்றவர், ஜெயஸ்ரீ தனது முதல் கணவரிடமும் இதுபோல தான் நடந்துக் கொண்டார்.
இரண்டாவது கணவரான என்னிடமும் அவர் தற்போது இப்படி ஏமாற்று வேலைகளில் ஈடுபடுபவர், மூன்றாவது திருமணம் செய்யவும் திட்டம் போடுகிறார். அதற்காகவே இந்த நாடகத்தை அவர் நடத்தி வருகிறார், என்று தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...