தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நடத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருவதோடு, எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை அவரது மக்கள் இயக்கம் தற்போது தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம், தான் நடிக்கும் படங்கள் மூலமாக அரசியல் பேசும் விஜய், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தவறுகளை தனது படங்கள் மூலமாக சுட்டிக் காட்டியும் வருகிறார்.
அந்த வகையில், விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படம் கல்வித் துறையில் நடக்கும் மோசடிகள் பற்றி பேசுவதோடு, நீட் தேர்வும், அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் பேச இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமோகா சிறைச்சாலையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தளபதி 64 படத்தில் ஹீரோயினாக நடிக்கும் மாளவிகா மோகனன், சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற போது, படு கவர்ச்சியான உடை அணிந்து கலந்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களால் கடுப்பான விஜய் ரசிகர்கள், நடிகை மாளவிகா மோகனனுக்கு கண்டனும் தெரிவித்து, சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
அதில், விஜய்க்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது, அவருடன் நடிக்கும் நீங்கள் இப்படி ஆபாசமான உடைகளை அணிந்து அதை கெடுத்து விடாதீர்கள். அவருடன் இணைந்து நடிக்கும் உங்களையும் மக்கள் கவனித்து வருகிறார்கள், என்று தெரிவித்துள்ளனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...