Latest News :

ஜாதகத்தை நம்பலாமா, வேண்டாமா! - குழப்பத்தை தீர்க்க வரும் ‘திருவாளர் பஞ்சாங்கம்’
Friday December-06 2019

ஜாதம், ஜோதிடம் போன்றவற்றின் மீது ஆர்வம் கொண்டிருப்பவர்களுக்கு கூட, திடீரென்று அதன் மீது ஒரு சந்தேகம் எழும், அதே சமயம், அவற்றின் மீது நம்பிக்கை அற்றவர்களாக இருப்பவர்கள் கூட, சிலரைப் பார்த்து, இது உண்மையாக இருக்குமோ!, என்று யோசிப்பார்கள். ஆனால், இதில் இரண்டில் எது உண்மை என்பதை அறியாமல் குழப்ப நிலையில் இருப்பவர்களும் உண்டு. அப்படியானவர்களுக்கான ஒரு தீர்வாக உருவாகியிருக்கும் படம் தான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’.

 

அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்தில் ஆனந்த் நாக் ஹீரோவாக நடித்திருக்கிறார். காதல் சுகுமார், ஊர்வசி, ஆடுகளம் நரேன், சுதா, கெளதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

ஜோதிடத்தை நம்பலாமா அல்லது வேண்டாமா, என்பது குறித்து பேசும் இப்படம் முழுக்க முழுக்க காமெடியான ஒரு நூறு சதவீதம் பொழுதுபோக்கு படமாக உருவாகினாலும், படம் பார்ப்பவர்களுக்கு நல்ல மெசஜ் சொல்லும் படமாகவும் உருவாகியிருக்கிறதாம்.

 

இப்படம் குறித்து இயக்குநர் மலர்விழி நடேசன் கூறுகையில், “ஒரு படித்து பட்டம் பெற்ற அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் ஒரு சராசரி வாலிபன் ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் இவைகளின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான். தனக்கோ அல்லது தன் நண்பர்களுக்குக்கோ எதாவது பிரச்சினை என்றால் அதனை ஜோதிடம்  மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை பார்த்து பயன்படுத்தி  தீர்த்து கொள்கிறான்.

 

அப்படி தீடிரென ஒரு பிரச்சினை வர, ஜாதகத்தை கடை பிடித்து அந்த பிரச்சனையில் இருந்து வெளி வருகிறானா? அல்லது ஜாதகம் அவனை கைவிடுகிறதா? என்பதை மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறேன்.  கதாநாயகனின் ஏழு நாள்கள் பயணம் தான் இப்படம்.

 

இப்படம் முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.” என்றார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

Related News

5955

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery