விஜய் நடித்து வரும் அவரது 64 வது படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இவர் விஜயின் மிக நெருங்கிய உறவினர் ஆவார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். மகள் சினேகா பிரிட்டோ, சட்டம் ஒரு இருட்டறை 2’ படத்தை இயக்கியிருக்கிறார்.
அப்படத்திற்குப் பிறகு சின்மாவில் ஈடுபாடு காட்டாத சினேகா பிரிட்டோ நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷை காதலித்து வந்ததும், இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது, என்ற செய்தியை ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்தோம்.
அதன்படி, சினேகா பிரிட்டோ - ஆகாஷ் முரளியின் திருமண நிச்சயதார்த்தம், நேற்று (நவ.6) சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது.
விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த திருமண நிச்சயதார்த்தத்தில், ஆகாஷ் மற்றும் சினேகா குடும்பத்தின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்துக் கொண்டார்கள்.
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...