ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ல ‘ஸ்பைடர்’ தமிழ் மற்றும் தெலுங்கி என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதால், இரு மொழிகளில் வெளியிடுகிறார்கள்.
ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
ஸ்பைடர் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரைலர் இன்று (செப்.15) வெளியாக இருந்த நிலையில், தயாரிப்பு தரப்பு வெளியிடுவதற்கு முன்பாகவே இணையத்தில் லீக் ஆனது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மிகவும் பாதுகாப்போடு படத்தின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டிரைலர் இப்படி சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதால், படத்தையும் இதுபோல வெளியிட்டு விடுவார்களோ, என்று படக்குழுவினர் பீதியடைந்துள்ளனர்.
இதையடுத்து, சட்டவிரோதமாக ஸ்பைடர் டிரைலர் இணையத்தில் லீக் ஆகிவிட்டதால், படக்குழுவினரும் உடனடியாக டிரைலரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு விட்டார்கள்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...