Latest News :

”ஐயோ பாவம் சோனியா அகர்வால்” - பரிதாபப்படும் கோலிவுட்!
Sunday December-08 2019

2002 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனியா அகர்வால் தொடர்ந்து ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘கோவில்’, ‘மதுர’ என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நிலையில், இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

 

பிஸியான நடிகையாக இருக்கும் போதே திருமணத்திற்காக நடிப்புக்கு முழுக்குப் போட்ட சோனியா அகர்வாலுக்கு திருமண வாழ்க்கையும் கைகொடுக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு செல்வராகவனை திருமணம் செய்துக் கொண்ட சோனியா அகர்வால், அவரை 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

 

அதற்குள், சோனியா அகர்வாலை ரசிகர்களும், திரையுலகினரும் மறந்துவிட்ட நிலையில், மீண்டும் நடிக்க வந்தவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து விவேக் ஹீரோவாக நடித்த ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

 

இந்த நிலையில், சோனியா அகர்வாலை விட சீனியர் நடிகையான ரம்யா கிருஷ்ணனுக்கு சோனியா அகர்வால், அம்மாவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெப் சீரிஸ் குயின். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை தொடரான இதில், ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க, ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவாக சோனியா அகர்வால் நடிப்பதாக கூறப்படுகிறது.

 

திருமணத்திற்குப் பிறகு நடிக்கும் பல நடிகைகளுக்கு தற்போது சில்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்க, சோனியா அகர்வாலுக்கு மட்டும் இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்திருப்பதை எண்ணி, ஒட்டு மொத்த கோலிவுட்டும், “ஐயோ பாவாம் சோனியா அகர்வால்” என்று பரிதாபப்படுகிறதாம்.

 

Ramya Krishnan

 

ஏற்கனவே, சில படங்களில் சோனியா அகர்வால் அம்மாவாக நடித்திருந்தாலும், ‘குயின்’ தொடரில் அம்மாவுக்கே அம்மாவாக நடிப்பதை எண்ணி தான் அனைவரும் அவர் மீது பரிதாபப்படுகிறார்களாம்.

Related News

5960

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery