‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தனுஷ் நடிகராகவும், செல்வராகவன் இயக்குநராகவும் அறிமுகமாகி, தற்போது இருவரும் தமிழ் சினிமாவில் தங்களுக்கு என்று தனி இடத்தையும், பெரிய ரசிகர் வட்டத்தையும் கொண்டிருக்கிறார்கள்.
அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில், தம்பி தனுஷ் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் வெற்றிப் படங்கள் தான் என்றாலும், ‘புதுப்பேட்டை’ ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட்டாக உள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் மட்டும் இன்றி தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
தற்போது தனுஷ் ‘வட சென்னை’, ‘அசுரன்’ என்று மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்து வந்தாலும், இயக்குநர் செல்வராகவனின் படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் செல்வராகவன் ஈடுபட்டுள்ளார். இதில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தனுஷ் புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

காரணம், வட சென்னை, அசுரன் போன்ற படங்களில் நடித்திருக்கும் தனுஷ், அதைப்போன்ற சாயல் கொண்ட புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தில் தற்போது நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். அதற்கு பதில் கார்த்தியை வைத்து செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புகிறாராம். இதனால், செல்வராகவனை புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தின் திரைக்கதை எழுவதை நிறுத்திவிட்டு, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரெடி பண்ணும்படி கூறியிருக்கிறாராம்.
தனுஷின் இந்த திடீர் மாற்றம் இயக்குநர் செல்வராகவனை ஏமாற்றம் அடைய செய்திருப்பதால், இருவருக்கும் இடையில் திடீரென்று சிறு மோதல் வெடித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த மோதல் இரு படைப்பாளிகளுக்கு இடையில் ஏற்படும் வழக்கமான ஒன்று தான், என்றும் கூறப்படுகிறது.

இந்த மோதல் தகவல் உண்மையோ, வதந்தியோ, செல்வராகவன் - தனுஷ் கூட்டணி படத்திற்காக பெரிதும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும், அவர்களது ரசிகர்கள், அப்படம் ‘புதுப்பேட்டை’ இரண்டாம் பாகமாக இருந்தாலும் சரி, ‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகமாக இருந்தாலும் சரி, இரண்டையுமே கொண்டாட தயாராகி விட்டார்கள்.
தற்போது, ‘பட்டாஸ்’ படத்தை முடித்திருக்கும் தனுஷ், கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு ‘பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...