தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் இருவரது படங்களும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலிலும் பல சாதனைகளை படைத்திருக்கிறது. அதேபோல், விஜயின் ‘பிகில்’ படம் சுமார் ரூ.300 கோடி வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய் நினைத்தால் அவரது படங்கள் ரூ.500 கோடி வசூல் ஈட்டும், என்று பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்தில் பேசிய தனஞ்செயன், “பிகில் படம் ரூ.300 கோடி வசூலித்திருக்கிறது. அதே போல் விஜயின் படங்கள் ரூ.500 கோடியை எளிதில் வசூலிக்கும். ஆனால், அதற்கு விஜய் தெலுங்கு மற்றும் இந்தியில் சற்று கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்தால் அவரது படங்கள் நிச்சயம் ரூ.500 கோடி வசூலிக்கும்.
அஜித் படங்களும் ரூ.500 கோடியை வசூலிக்கும். ஆனால், அஜித் படத்தின் புரோமோஷன்களில் கலந்துக் கொள்ள வேண்டும். விஜயாவது இசை வெளியீட்டு விழாக்களில் கலந்துக் கொள்கிறார். அதனால், அவரது படங்கள் ரீச் ஆகிறது. ஆனால், அஜித் தான் நடிக்கும் படங்களின் எந்த ஒரு நிகழ்விலும் கலந்துக் கொள்வதில்லை, இதனால் எப்படி அவரது படங்களுக்கு ரீச் கிடைக்கும், பிறகு எப்படி படத்தின் வசூல் அதிகரிக்கும்.

ஆகவே, தற்போதைய சூழலில் விஜயின் படங்கள் மட்டுமே ரூ.500 கோடி வசூலிக்க வாய்ப்பிருக்கிறது. அஜித் படங்களால் தற்போது அது முடியவே முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...