ஷங்கரின் ’பாய்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பரத், ‘காதல்’ படம் மூலம் பிரபலமானாலும், சமீபகாலமாக அவருக்கு சரியான படங்கள் அமையாததால், அவரது படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறுவதில்லை. இதனால், நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த பரத்துக்கு திருப்புமுனை படமாக ‘காளிதாஸ்’ இருக்கும் என்று அப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தவர்கள் கூறி வருகிறார்கள்.
வரும் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாக உள்ள ‘காளிதாஸ்’ படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார். அறிமுக இயக்குநரான் இவர், பல நல்ல இயக்குநர்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற இயக்குநர் ஆவார். அத்துடன், முறையாக சினிமாவை கற்றுத்தேர்ந்த ஸ்ரீ செந்தில், தனது முதல் படத்தை வித்தியாசமான ஜானரில் இயக்கியிருக்கிறார்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படமான ‘காளிதாஸ்’, நாட்டில் தற்போது நடக்கும் முக்கியமான குற்றங்கள் மற்றும் அதன் பின்னணியை தோளுரித்து காட்டியுள்ளாராம். குறிப்பாக ஸ்மார்ட்போன்களை பயன்பத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்களால் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களினால் நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் தற்போதைய காலக்கட்டத்தில், ஸ்மார்ட்போன்கள் மூலம் எப்படிப்பட்ட குற்றங்கள் நடக்கிறது, அதனை தடுக்கவும், அதில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்ற மெசஜை, முழுக்க முழுக்க கமர்ஷியல் வழியில் சொல்லியிருக்கும் இயக்குநர் ஸ்ரீசெந்தில், இப்படத்தில் உள்ள சஸ்பென்ஸை க்ளைமாக்ஸ் வரை யூகிக்க முடியாத வகையில், படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறாராம்.
இப்படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டுள்ளது. அதில் படம் பார்த்தவர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்கள். குறிப்பாக படத்தில் இருக்கும் சஸ்பென்ஸை இயக்குநர் கையாண்ட விதத்தை அனைவரும் வெகுவாக பாராட்டியுள்ளார்கள். பீட்சா, தடம், ஜீவி போன்ற படங்களைப் போல, இப்படத்தின் திரைக்கதையும் வெகுவாக பாராட்டுப் பெறுவதோடு, விமர்சன ரீதியாகவும், கமர்ஷியலாகவும் வெற்றி பெறும் என்று பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘இஷ்க்’ படத்தில் நடித்த அன் சீத்தல் ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன், வேல ராமமூர்த்தி, பிரியதர்ஷினி, அம்மு ராமச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
வேல்ராஜிடம் உதவியாளராக இருந்த சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
தொழில்நுட்ப ரீதியாகவும் தரமான படமாக உருவாகியுள்ள ‘காளிதாஸ்’ வரும் டிசம்பர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 300 திரையரங்கங்களில் வெளியாகிறது.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...