Latest News :

திருமணமாகி ஒரு வருடத்திற்குள் கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நடிகை!
Tuesday December-10 2019

சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் காலதாமதமாக திருமணம் செய்துக் கொண்டாலும், பல தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சில தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கு பிரபல நடிகை திருமணமாகி ஒரு வருடம் முழுவதுமாக முடிவதற்குள் தனது கணவரை விவாகரத்து செய்யும் முயறிசியில் இறங்கியுள்ளார்.

 

’ரா ரா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்வேதா பாசு. இப்படத்தை தொடர்ந்து கருணாஸின் ‘சந்தமாமா’, ’ஒரு முத்தம் ஒரு யுத்தம்’, ‘மை’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர், இந்தி திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வந்ததோடு, தெலுங்கு, பெங்காலி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார்.

 

’மக்தி’ என்ற இந்தி படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றிருக்கும் ஸ்வேதா பாசு, கடந்த வருடம் டிசம்பர் 13ம் தேதி தனது நீண்டநாள் காதலரான ரோஹித் மிடால் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

 

Swetha Basu

 

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த ஸ்வேதா பாசு, திருமணமாகி ஒருவருடம் முடியாத நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

Related News

5968

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery