விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினாலும் தயாரிப்பு தரப்பினரிடம் பெரிய பயத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். காரணம் படத்தின் பட்ஜெட் தான்.
விஜய் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமான ‘மெர்சல்’ படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.135 கோடி, என்று இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள ATMUS மற்றும் US Tamil LLC நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மெர்சல் வியாபரம் தொடர்பாக ஆரம்பத்திலேயே ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்திற்கு இடி விழுந்தாற்போல், விநியோகஸ்தர்கள் குறைவான விலைக்கு படத்தை கேட்டதோடு, விவேகம் படத்தை உதாரணமாக கூறி, பெரிய நடிகர்கள் படங்களை இப்போதெல்லாம் நம்ப முடியவில்லை, என்றும் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், எதற்கும் அசைந்துக்கொண்டுக்காத தயாரிப்பு தரப்பு, சொந்தமாகவே படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...