ரைட்டில் மீனா, லெப்டில் குஷ்பு! - ரஜினி போட்ட ஸ்பெஷல் பூஜை
Wednesday December-11 2019

ரஜினியின் அரசியல் அவதாரத்திற்காக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தாலும், ரஜினிகாந்த் படங்கள் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அதிலும், தனது ‘தர்பார்’ படம் வெளியாவதற்கு முன்பாகவே தனது 168 வது படம் குறித்தும் அவர் அறிவித்தார்.

 

இப்படமே ரஜினியின் கடைசி படம், அதன் பிறகு அவர் முழுநேர அரசியலில் ஈடுபட போவதாக ரஜினியின் சில ரசிகர்கள் பேசி வர, மறுபக்கம் சில இளம் இயக்குநர்களிடம் ரஜினிகாந்த் தொடர்ந்து கதை கேட்டு வருகிறார். இதனால், அவரது 169 வது படம் குறித்த தகவல்கள் இப்பவே பரவ தொடங்கியுள்ளது.

 

இதற்கிடையே, இன்னும் தலைப்பு வைக்கப்படாத ரஜினிகாந்தின் 168 வது படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா ஆகியோர் ஒப்பந்தமான நிலையில், திடீரென்று குஷ்புவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் யார், ரஜினிக்கு ஜோடி என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், மீனா அவருக்கு மனைவியாக நடிப்பதாகவும், குஷ்பு அவருக்கு வில்லியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், ரஜினியின் 168 வது படத்தின் தொடக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. இதில், ரைட்டில் மீனா நிற்க, லெப்டில் குஷ்பு நிற்க நடுவில் ரஜினி நின்றபடி சிறப்பு பூஜை செய்தார்.

Related News

5976

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...

Recent Gallery