சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’தெய்வமகள்’ தொடர் மூலம் மக்களிடம் பிரபலமான வாணி போஜன், மேலும் சில டிவி தொடர்களில் நடித்து வந்த நிலையில், திடீரென்று டிவி சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு திரைப்படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அந்த வகையில், நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் ‘லாக்கெப்’ படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமான வாணி போஜன், அப்படத்தை தொடர்ந்து ஒரு தெலுங்குப் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், வாணி போஜன் நடித்திருக்கும் ‘லாக்கெப்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் நிலையில், அப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது.
இதன் மூலம், சீரியல் நடிகை வாணி போஜனுக்கு மீண்டும் சன் தொலைக்காட்சி கை கொடுத்திருக்கிறது. ஒரு வேளை திரையரங்குகளில் ‘லாக்கெப்’ சரியாக ஓடவில்லை என்றாலும், சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடம் ரீச் ஆனால், சீரியல் நடிகை வாணி போஜன், சினிமா நடிகையாகி விட்டார் என்று மக்களுக்கு தெரிந்துவிடும்.
ஆக, வாணி போஜனுக்கு மீண்டும் சன் தொலைக்காட்சி கைகொடுத்திருக்கிறது.
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது...
ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்...