Latest News :

சந்தோஷ் பிரதாபின் உதவி இயக்குநர் செண்டிமெண்ட்!
Wednesday December-11 2019

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘நான் அவளை சந்தித்தபோது’. சினிமா பிளாட்பார்ம் நிறுவனம் சார்பில் வி.டி.ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக சாந்தினி நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் இன்னசண்ட் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் ஜி.எம்.குமார், பருத்திவீரன் சுஜாதா, கோவிந்த் மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், காதல் சரவணன், நாடோடிகள் ரங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

 

’கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான சந்தோஷ் பிரதாப், அப்படத்திலும் உதவி இயக்குநராக தான் நடித்திருப்பார். அப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக உதவி இயக்குநர் வேடத்தில் தற்போது நடித்திருக்கிறார். சந்தோஷ் பிரதாப் உதவி இயக்குநர் வேடத்தில் நடித்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் மிகப்பெரிய் வெற்றி பெற்றது போல், ‘நான் அவளை சந்தித்தபோது’ படமும் வெற்றிப் படமாக அமையும் என்று படக்குழு செண்டிமெண்டாக நம்புகின்றனர்.

 

செண்டிமெண்ட்டுக்காக அட்டும் அல்லாமல், இப்படத்தை பார்ப்பவர்கள், குறிப்பாக பெண்கள் கண்கலங்காமல் இருக்க மாட்டார்களாம். அந்த அளவுக்கு படத்தில் ஒரு ஆழமான உணர்வு இருக்குமாம்.

 

‘மாசாணி’, ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஆர்.எஸ்.செல்வா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹித்தேஷ் முருகவேல் இசையமைக்க, அறிவுமதி, நா.முத்துக்குமார், எல்.ஜி.ரவிச்சந்தர், நல்.செ.ஆனந்த் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். சிவசங்கர், பாலகுமாரன், ரேவதி, தினேஷ் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். ஹரி தினேஷ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றும் ஹீரோ, வாய்ப்பு தேடி போகும் போது வழியில் இளம்பெண் ஒருவரை சந்திக்கிறார். சென்னையில் தன் உறவினரின் வீட்டிற்கு வந்தவள் முகவரியை தொலைத்துவிட்டு வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஹீரோ அவரை காப்பாற்றி அவளின் ஊர்வரை கொண்டு போய் விட போகிறார். போன இடத்தில் ஊர்க்காரர்கள் ஒன்று கூடி இருவரையும் காதலர்கள் என தவறாக நினைக்கிறார்கள். பின்னர் என்ன் நடக்கிறது, நாயகன் நாயகி என்ன ஆனார்கள் என்பதே படத்தின் கதை.

 

Naan Avalai Sandhitha Pothu

 

இப்படம் 1996 ஆம் ஆண்டு ஒருவரது வாழ்வில் நடந்த சம்பவமாம். அதை மையமாக வைத்தே இப்படத்தின் கதையை எல்.ஜி.ரவீந்தர் எழுதினாராம்.

 

தென்காசி, குற்றாலம், பாபநாசம், மாயவரம் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது.

Related News

5978

காதல் மற்றும் ஊடலை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஹாஃப் பாட்டில்’ பாடல்!
Friday April-26 2024

திரை இசை பாடல்களைப் போல் தற்போது சுயாதீன பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் முன்னணி இசையமைப்பாளர்கள் கூட தற்போது இதில் ஈடுபாடு காட்ட தொடங்கிவிட்டார்கள்...

உடல் நலக்குறைவால் காலமான ரசிகர்! - வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி
Wednesday April-24 2024

நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’ மே 10 ஆம் தேதி வெளியாகிறது!
Wednesday April-24 2024

யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...