தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழும், ரஜினிகாந்த் இன்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்த ரஜினிகாந்த், இன்று 70 வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவுக்கே சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை பெற்றிருக்கும் ரஜினிகாந்த், இதுவரை 167 படங்களில் நடித்திருக்கிறார். அவரது 167 வது படமான ‘தர்பார்’ பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ள நிலையில், 168 வது படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை பெற்றிருக்கும் ரஜினிகாந்த், தனது 168 வது படத்திற்காக ரூ.100 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் முதல் தென்னிந்திய சினிமா ஹீரோ என்ற சாதனையை ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ளார்.
70 வது பிறந்தநாளில் ரஜினிகாந்த் நடிக்க தொடங்கியிருக்கும் 168 வது படம் தான் அவரது கடைசிப் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருக்கும் ரஜினிகாந்த், 2020 ஆம் ஆண்டு சித்திரை மாதம், தனது அரசியல் கட்சி மற்றும் சின்னம் குறித்து அறிவிக்க இருக்கிறாராம்.
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது...
ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்...