இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள். அந்த வகையில், ‘களவாணி 2’ மூலம் வில்லன் நடிகராக அறிமுகமாகி பாராட்டு பெற்ற நடிகர் துரை சுதாகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், “தமிழகத்தையும் தாண்டி, இந்திய ரசிகர்களை கவர்ந்ததோடு, வெளிநாட்டு ரசிகர்களையும் தனது காந்த நடிப்பால் ஈர்த்திருக்கும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்திய ரஜினிகாந்த், அரசியல் உலகிலும் பல சாதனைகளோடு, சூப்பர் ஸ்டாராக வலம் வர வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
‘களவாணி 2’ படத்தை தொடர்ந்து ‘டேனி’ என்ற படத்தில் மீண்டும் வில்லனாக துரை சுதாகார் மிரட்டியிருக்கிறார். வரலட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் துரை சுதாகர், எப்படி ‘களவாணி 2’-வில் வித்தியாசமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தினாரோ அதுபோல், ‘டேனி’ படத்திலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறாராம்.
மேலும், பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வரும் துரை சுதாகர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக நிச்சயம் உருவெடுப்பார், என்று இயக்குநர்கள் பாராட்டி வருகிறார்கள்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...