நடன இயக்குநர், நடிகர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று சினிமாவில் பல பரிணாமங்களில் வலம் வரும் ராகவா லாரன்ஸ், ஆன்மீகத்தில் எப்படி தீவிரம் காட்டி வருகிறாரோ அதுபோல் தீவிர ரஜினி ரசிகராகவும் இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற ‘தர்பார்’ பட இசை வெளியீட்டு விழாவில் கமல் குறித்து லாரன்ஸ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, சென்னையில் ரஜினியின் 70 வது பிறந்தநாள் விழாவில் பேசிய லாரன்ஸ், கமல் குறித்து தான் பேசியதற்கு விளக்கம் அளித்தார். அதாவது, தான் சிறு வயதில், அறியாம, தெரியாமல் கமல் போஸ்டரில் சானி அடித்தேன். ஆனால், தற்போது ரஜினியும், கமலும் நண்பர்களாக இருப்பதை பார்த்து, நான் செய்தது தவறு, என்று புரிந்துக் கொண்டேன். மற்றபடி எந்த உள்நோக்கத்துடன் அதை சொல்லவில்லை. தலைவர் ரஜினி யாருடன் எல்லாம் நட்பாக இருக்கிறாரோ, அவர்கள் எல்லோரும் எனக்கும் நண்பர்கள். தான் அந்த வகையில் கமல் சாரும் எனக்கு பிடித்தவர் தான். இதற்கு மேலும், என் மீது கோபம் இருந்தால், என் வீட்டுக்கு வந்து என்னை திட்டுங்கள், அடியுடங்கள் ஏற்றுக் கொள்கிறேன், என்று லாரன்ஸ் கூறினார்.
மேலும், கமல் இயக்கி நடிக்கும் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும், என்று கமல் கேட்டதாகவும், ஆனால், தான் இயக்கும் படங்களில் பிஸியாக இருப்பதால் தன்னால் நடிக்க முடியாது, எனு கூறிவிட்டதாகவும் லாரன்ஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது...
ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்...