ரஜினியை காக்க வைத்த யோகி பாபு!
Saturday December-14 2019

ரஜினியின் 168 வது படத்தின் துவக்க விழா சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், ‘தர்பார்’ படத்தின் இறுதி படப்பிடிப்பு இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து, டப்பிங் பணிகளும் நிறைவு பெற்ற நிலையில், பின்னணி வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தர்பார் படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க முடிவு செய்த படக்குழு அதற்காக ஒரு நாள் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்ததாம். அதன்படி, ‘தர்பார்’ படத்தின் இறுதி படப்பிடிப்பு இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

அதே சமயம், இந்த ஒரு நாள் படப்பிடிப்பை எப்போதே நடத்தியிருக்க வேண்டியதாம். ஆனால், யோகி பாபுவின் தேதி கிடைக்காததால் தான், இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த பிறகு, ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருப்பது ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டதாம். அதேபோல், அந்த காட்சியில் யோகி பாபு இருப்பதால், அவரிடம் தேதி கேட்கப்பட, அவரோ பிஸியாகி விட்டதோடு, தற்போது தேதிகள் இல்லை, என்று கூறியிருக்கிறார்.

 

விஷயம் ரஜினியிடம் செல்ல, அவரோ யோகி பாபு எப்போது வருகிறாரோ அப்போது படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம், என்று பெருந்தன்மையுடன் கூறியிருக்கிறார். அதன்படி, யோகி பாபுவின் தேதி இன்று கிடைத்திருப்பதால், தர்பார் படத்தின் இறுதி படப்பிடிப்பு இன்று நடைபெறுகிறதாம்.

 

ஏற்கனவே, நயன்தாரா சம்பள பாக்கிக்காக தனது போர்ஷனின் இறுதி படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளாமல் இருக்க, அவருக்காக ரஜினிகாந்த், செட்டில் பல மணி நேரங்கள் காத்திருந்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது யோகி பாபுவும் ரஜினியை பல நாட்கள் காக்க வைத்திருக்கும் இந்த தகவலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

5985

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...

நடிகர் விக்ரமின் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில்   பெருமை கொள்கிறது...

ஆகஸ்ட் 8 ஆம் தேதி ’பாய் - ஸ்லீப்பர் செல்ஸ்’ வெளியாகிறது!
Thursday July-17 2025

ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்...

Recent Gallery