Latest News :

பாண்டியராஜனின் பிடிவாதம்! - கோடி ரூபாய் கொடுத்தாலும் கொடுக்க மாட்டாராம்
Saturday December-14 2019

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர்களில் பாண்டியராஜனும் ஒருவர். கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான ‘கன்னி ராசி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டியராஜன், இளம் வயதில் இயக்குநர் ஆனவர்களில் ஒருவர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

 

மேலும், தனது இரண்டாவது படமான ‘ஆண் பாவம்’ படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர், அதில் இருந்து படம் இயக்குவதோடு தொடர்ந்து நடித்தும் வந்தார்.

 

காமெடி கலந்த குடும்ப பாங்கான திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்ற பாண்டியராஜனின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ’கைவந்த கலை’ இப்படத்திற்குப் பிறகு படம் இயக்கவில்லை என்றாலும், தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் பாண்டியராஜன் இயக்கி நடித்த ‘ஆண் பாவம்’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படமாகவும், ரசிகர்களின் பேவரைட் படமாகவும் உள்ளது.

 

இந்த நிலையில், ‘ஆண் பாவம்’ என்ற தலைப்பை தங்களது படங்களுக்கு வைக்க சில முன்னணி இயக்குநர்கள் விரும்பினாலும், அந்த தலைப்பை பாண்டியராஜன் கொடுக்க மறுத்து வருகிறாராம்.

 

அறிமுக இயக்குநர் ஒருவரது இயக்கத்தில் சித்தார்த் நடிக்க இருக்கும் படத்திற்கு ஆண் பாவம் என்ற தலைப்பு வைக்க விரும்பிய படக்குழு பாண்டியராஜனை சந்தித்து, தலைப்பை கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவர் தலைப்பை கொடுக்க மறுத்ததோடு, கோடி ரூபாய் கொடுத்தாலும் ஆண் பாவம் தலைப்பை கொடுக்க முடியாது, என்று கூறினாராம்.

 

தனக்கு மிகப்பெரிய அடையாளமாக இருப்பது ‘ஆண் பாவம்’ படம் தான். அந்த தலைப்பை வேறு ஒரு படத்திற்கு வைப்பதன் மூலம் தனது அடையாளத்தை இழக்க விரும்பவில்லை, என்று கூறினாராம்.

Related News

5986

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery