பிக் பாஸ் டிவி நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் மூன்று சீசன்களை கடந்து விரைவில் நான்காவது சீசன் தொடங்க இருக்கிறது. முதல் இரண்டு சீசன்களை காட்டிலும், மூன்றாவது சீசன் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், நான்காவது சீசன் மிக பிரம்மாண்டமான முறையில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியில் 13 வது சீசன் முடிவடைந்த நிலையில், நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரீச் ஆனதால், கூடுதலாக 5 எப்பிசோட்களை நடத்த முடிவு செய்துள்ளார்களாம். அதே சமயம், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் நடுவரான நடிகர் சல்மான் கான், இந்த கூடுதல் எப்பிசோட்களை தொகுத்து வழங்க முடியாது, என்று கூறி விட்டாராம்.
அதனால், இந்தி பிக் பாஸ் 13 வது சீசனின் கூடுதலான 5 எப்பிசோட்களை பிரபல நடன மற்றும் திரைப்பட இயக்குநர் ஃபரா கான் தொகுத்து வழங்கப் போவதாக கூறப்படுகிறது.
'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார்...
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...