’வானவராயன் வல்லவராயன்’ படத்தின் மூலம் நடிகரான மா.க.பா.ஆனந்த், தொடர்ந்து ‘நவரச நாயகன்’, ‘கடலை’, ’அட்டி’ என தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்ததோடு, ‘பஞ்சுமிட்டாய்’, ‘மாணிக்’ ஆகிய படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதில், மாணிக் படத்தின் தொடக்கத்திலே, பாட்ஷா ரஜினிகாந்த் கெட்டப்போடு இருக்கும் போஸ்டர்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய மா.கா.பா.ஆனந்த், தற்போது அப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மூலம் டிரெண்டாகியுள்ளார்.
கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் சீசன் 5 போட்டியின் டைடில் வின்னரான மார்டின் இயக்கும் இப்படத்தில் மா.கா.பா.ஆனந்துக்கு ஜோடியாக சூசா குமார் நடிக்க, மற்றொரு ஹீரோவாக வத்சன் நடித்துள்ளார்.
மோஹிதா சினி டாக்கீஸ் சார்பில் எம்.சுப்பிரமணியம் தயாரித்துள்ள இப்படம், காமெடி கலந்த பேண்டஷி படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் பஸ்ட் லுக்கை சமீபத்தில் நடிகர் விஷால் வெளியிட்டார். இதில், மா.கா.பா.ஆனந்த் ஜானி படத்தில் ரஜினிகாந்த் இருப்பது போன்ற கெட்டப்பில் இருக்க, இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து ரஜினிகாந்தின் கெட்டப்புகளிலேயே இப்படத்தின் போஸ்டர்களில் மா.கா.பா.ஆனந்த் தோன்றுவதால், ‘மாணிக்’ படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பஸ்ட் லுக்கை தொடர்ந்து விரைவில் இப்படத்தின் டீசர் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழுவினர் அடுத்ததாக பாடல்களையும், அதை தொடர்ந்து படத்தையும் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
பஸ்ட் லும் வெளியீட்டு விழாவில், ஹீரோ மா.கா.பா.ஆனந்த், இயக்குநர் மார்டின், தயாரிப்பாளர் எம்.சுப்பிரமணியம், ஒளிப்பதிவாளர் எம்.ஆர்.பழனிகுமார், எடிட்டர் கே.எம்.ரியாஸ், இணை இயக்குநர் மணி ஆகியோர் உடன் இருந்தார்கள்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...