தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கையில் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் நயன்தாராவை, தங்களது படங்களில் ஹீரோயினாக்குவதற்காக பல தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அரசியல்வாதி காட்டிய ஆர்வத்தினால் நயன் ரொம்பவே அப்செட்டாகியிருக்கிறாராம்.
‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக நாகர்கோவிலில் முகாமிட்டுள்ள நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு விசிட் அடித்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்தவரை, அப்பகுதி பா.ஜ.க பிரமுகர் ஒருவர் சந்தித்து பேசியதோடு, ”பா.ஜ.க-வில் நீங்கள் சேர வேண்டும்”, என்ற தனது விருப்பத்தை நயன்தாராவிடம் கூறினாராம்.
சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த அரசியல்வாதியின் இத்தகைய ஆர்வமான பேச்சால் அப்செட்டான நயன்தாரா, அந்த இடத்தில் இருந்து சட்டென்று கிளம்பி விட்டாராம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...