‘விஸ்வாசம்’ படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் பல பிரம்மாண்ட திரைபப்டங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில், தயாரிப்பாளர் சந்துருவுடன் இணைந்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘ஆலம்பனா’ பிரம்மாண்டமான முறையில் உருவாகிறது.
முற்றிலும் மாறுபட்ட கமர்ஷியல் பேண்டஸி படமாக உருவாகும் இப்படத்தை பாரி கே.விஜய் எழுதி இயக்குகிறார். இவர் ’முண்டாசுப்பட்டி’, ’இன்று நேற்று நாளை’ ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர். மக்களை எண்டெர்டெயின்மெண்ட் பண்ணும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். இதுவரை வந்த வைபவ் படங்களிலே ஆலம்பனா தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. மேலும் வைபவ் கரியரில் இது மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது. படத்தில் முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பல வருடங்களுக்குப் பிறகு பட்டிமன்றங்களின் ஹீரோ திண்டுக்கல் ஐ லியோனி இப்படத்தில் நடிக்கிறார். மேலும் படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதம் தருவது போல காளிவெங்கட், ஆனந்த்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். நடிகர் பாண்டியராஜன் முரளிசர்மா ஆகியோர் வெயிட் கேரக்டர்களில் நடிக்க, வேதாளம் படத்தில் வில்லனாக மிரட்டிய கபீர்துபான் சிங் வில்லன் வேடமேற்றிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான கோமாளி படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தெறிக்கவிட்ட ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கிறார். நெடுநல்வாடை படத்தில் கிராமத்தின் அழகை துளியும் குறையாமல் தன் கேமராவிற்குள் கொண்டு வந்த வினோத் ராமசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். ராட்சசனில் தன் இமலாய உழைப்பைக் கொடுத்த எடிட்டர் ஷான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை கவனிக்கிறார். மாஸான சண்டைக்காட்சிகளால் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பீட்டர் கெய்ன் ஸ்டண்ட் பொறுப்பை கவனிக்க, ஆர்ட் டைரக்டராக கோபி ஆனந்த் பங்கேற்கிறார்.

படத்தில் பங்குபெறும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படம் தாங்கி நிற்கும் கதையம்சம் அனைத்துமே ஈர்க்கக்கூடியளவில் இருக்கும் ஆலம்பனா படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் சமீபத்தில் மிகப்பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது.
பூஜையில் ஹீரோ வைபவ், நாயகி பார்வதிநாயர், இயக்குநர் பார்.கே விஜய் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக நேற்று இன்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார், முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களின் இயக்குநர் ராம்குமார், குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களின் இயக்குநர் கல்யாண் பலூன் படத்தின் இயக்குநர் சினிஸ், டோரா படத்தின் இயக்குநர் தாஸ்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...