தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்க வேண்டிய சிம்பு, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். ஏராளமான ரசிகர்களை கொண்ட நடிகராக இருந்தும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்க முடியாததோடு, கிடைக்கும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார். இதனால், சிம்புவின் ரசிகர்களே அவருக்கு எதிராக சோசியல் மீடியாக்களில் பதிவுகளை வெளியிட தொடங்கியிருக்கிறார்கள்.
அதே சமயம், தன்னைப் பற்றி எந்தவிதமான விமர்சனங்கள் வந்தாலும், அதை கண்டுக்கொள்ளாத சிம்பு, தற்போது ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்ட தொடங்கியுள்ளார். சபரி மலைக்கு மாலை போட்ட சிம்பு, இனி திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தனது முன்னாள் காதலியான நடிகை நயன்தாராவை சமீபத்தில் சந்தித்த சிம்பு, பெண்களால் தனது வாழ்க்கை நாசமாகிவிட்டதாக கூறி அழுதாராம். மேலும், என்னை நடிகைகள் பலர் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவரிடம் கூறினாராம். உடனே நயன்தாரா, சிம்புவுக்கு ஆறுதல் கூறினாராம்.
மேலும், நயன்தாராவை சந்தித்து பேசிய பிறகே சிம்பு சபரிமலைக்கு மாலை போட்டதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், கோடம்பாக்கத்து டீ கடைகளில் இந்த தகவல் தீயாக பரவுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...