Latest News :

ரசிகர்கள் பாராட்டில் ‘காளிதாஸ்’! - உற்சாகத்தில் பரத்
Monday December-16 2019

பரத்துக்கு ‘காளிதாஸ்’ திருப்புமுனை படமாக அமைய இருக்கிறது, என்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். சொன்னது போலவே பரத்துக்கு ‘காளிதாஸ்’ கைகொடுக்க, அவரும் உற்சாகத்தோடு ‘காளிதாஸ்’-ன் வெற்றியை கொண்டாடி வருகிறார்.

 

அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன், அன் சீதல் ஆகியோர் நடித்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான ‘காளிதாஸ்’ அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறது. உளவியல் ரீதியான பிரச்சினை குறித்து பேசியிருக்கும் இப்படம், கணவன், மனைவி சேர்ந்து பார்க்கும் சிறந்த குடும்ப சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

 

விறுவிறுப்பாகவும், அதே சமயம் யூகிக்க முடியாத சஸ்பென்ஸ், எதிர்ப்பார்க்காத க்ளைமாக்ஸ் என்று சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கும் இப்படம், பெண்களையும் அதிகமாக கவர்ந்திருக்கிறது.

 

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதோடு, எந்தவிதமான நெருடலான காட்சிகள் இல்லாமல் நேர்மையாக இப்படத்தின் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் ஸ்ரீசெந்திலை ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

 

பரத் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்ததோடு, முதிர்ச்சியான அதே சமயம் இயல்பாக நடித்து கவர்வதோடு, காக்கி சட்டைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

Kaalidas Poster

 

இந்த நிலையில், ‘காளிதாஸ்’ படம் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடுவதால், தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இதனால், தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

 

வெற்றிக்காக நீண்ட நாட்களாக காத்திருந்த பரத்துக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருப்பதோடு, தரமான படம் என்ற அங்கீகாரத்தையும் பெற்றிருப்பதால் பரத், உற்சாகமடைந்திருக்கிறார்.

Related News

5997

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery