பிரபல கிராமிய பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி, அனிதா தம்பதியின் மூத்த மகள் பல்லவி. இவர் எம்.பி.பி.எஸ் படித்திருக்கிறார். இவர் நேற்று இரவு முதல் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புஷ்பவனம் குப்புசாமி போலீசில் புகார் அளித்திருக்கிறாராம்.
நேற்று இரவு பல்லவிக்கும், அவரது தங்கைக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாம். இதில் கோபமடைந்த பல்லவி, வீட்டிலிருந்த காரை எடுத்துக் கொண்டு இரவு 8 மணிக்கு வெளியே சென்றாராம். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லையாம்.
இது தொடர்பாக சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் குப்புசாமி - அனிதா குப்புசாமி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார்...
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...