Latest News :

ஹர்பஜன் சிங்கை திருவள்ளுவராக்கிய பிளாக் ஷீப்!
Monday December-16 2019

ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்ளிட்டவர்களால் நடத்தப்படும் யூடியூப் சேனலான பிளாக் ஷீப், பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது புதிய பரிணாமத்தில் பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பிளாக் ஷீப் குழு, ‘எல்லாருக்கும் நல்லாருக்கும்’ என்ற வாக்கியத்தோடு புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

புதிய நிகழ்ச்சிகளின் துவக்க விழா இன்று சென்னை விஜயா ஃபோரோம் மாலில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோ, நடிகரும் டாக்டருமான சேதுராமன், தொலைக்காட்சி புகழ் கோபிநாத், அசார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.

 

இந்த புதிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘திருக்குறல் கன்சல்டன்சி சர்வீஸ்’ என்ற வெப் சீரிஸில் ஹர்பஜன் சிங் திருவள்ளுவர் வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் நடித்து வரும் ஹர்பஜன் சிங், முதல் முறையாக தமிழ் வெப் சீரிஸிலும் நடிக்க தொடங்கியுள்ளார். டியுட் விக்கி இயக்கும் இந்த வெப் சீரிஸ் 12 பகுதிகளை கொண்டதாகும். இதன் முதல் சீசன் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

 

தமிழ் டிஜிட்டல் தளத்தில் இயங்கும் திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கும் நோக்கத்தோடு, ‘பிளாக் ஷீப் டிஜிட்டல் விருதுகள்’ என்ற விழாவை நடத்த இருக்கிறார்கள்.

 

பிளாக் ஷீப்பில் புதிய நிகழ்ச்சிகளுக்காகவே பிளாக் ஷீப் வேல்யூ தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம். மேலும், பிளாக் ஷீப் ஓடிடி (Black Sheep OTT) என்று சொல்லப்படும் தனி ஆப்-பையும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

 

பிளாக் ஷீப் F3 (FACES FOR THE FUTURE) என்ற பெயரில் மாநில அளவிலான கல்லூரி திறமைத் திருவிழாவை நடத்த இருக்கிறார்கள். 2020 ஜனவரி 5 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் இந்த திறமைத் திருவிழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு பிளாக் ஷீப்பில் இணையும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

 

பிளாக் ஷீப் ரீவேம்ப் என்ற பெயரில், 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி முதல் மேலும் பல புதிய நிகழ்ச்சிகளுடன் மேன்படுத்தப்பட்ட தரத்தில், பல புதுமைகளுடனும் பிரம்மாண்டத்துடனும் பிளாக் ஷீப் பயணிக்க தொடங்குகிறது.

 

‘ஆண்பாவம்’ என்ற வெப் சீரிஸையும் தயாரிக்கிறது. இதில் ஒரு ஆண் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சினைகளை வேடிக்கையான முறையில் விவாதிக்க உள்ளார்கள். இதில், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் ஹீரோவாக நடித்த டாக்டர்.சேதுராமன் நடிக்கிறார். ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் தன் முத்திரியை பதித்த கார்த்திக் வேணுகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த வெப் சீரிஸ் 12 பகுதிகளை கொண்டது. இந்த தொடரின் முதல் சீசன் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் வெளியாக இருக்கிறது.

 

இவற்றுடன், புட் சட்னி புகழ் ராஜ்மோகன் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் வெற்றிகரமான விநியோகஸ்தராக தன் முத்திரையை பதித்த ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் தயாரிப்பில், பர்ஸ்ட் காபி அடிப்படையில், பிளாக் ஷீப் புரொடக்‌ஷன்ஸ் மூலம் புதிய படம் ஒன்றையும் தயாரிக்க இருக்கிறார்கள்.

 

தற்கால பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, தேவை, ரசனை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், காதல், நட்பு மற்றும் இன்றைய சூழலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இப்படத்தில் பதிவு செய்ய இருக்கிறார்களாம். ஒட்டு மொத்த பிளாக் ஷீப் நட்சத்திரங்களும் நடிக்க, பிளாக் ஷீப் அயாசும், மைக் செட் ஸ்ரீராமும் இதில் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 

இப்படி, பல புதிய நிகழ்ச்சிகளுடனும், புதிய திரைப்படத்துடனும் புத்தாண்டில் பல புதுமையோடு பயணிக்க் திட்டமிட்டுள்ள பிளாக் ஷீப்பின் இந்த புதிய பயணம் வெற்றிப் பயணமாக அமைய வாழ்த்துவோம்.

Related News

5999

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery