தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மூலம் தமிழக ரசிகர்களின் பக்கத்து வீட்டு பையன் என்ற இமேஜை பெற்றிருக்கிறார். எந்தவிதமான கதாப்பாத்திரத்திற்கு பொருந்திப் போக கூடியவர், அதில் இருக்கும் சிறு செண்டிமெண்ட் மூலம் ரசிகர்களை கவர்வதோடு, மாஸான காட்சிகள் மூலம் தனது ரசிகர்களையும் திருப்திப்படுத்தி வருகிறார்.
‘கைதி’ யின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ‘தம்பி’ வெளியாக இருக்கிறது. இதில் ஜோதிகா கார்த்தியின் அக்காவாக நடித்திருக்கிறார். குடும்ப சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருக்கும் நிகிலா விமல், படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறுகையில், ”படப்பிடிப்பின் துவக்கத்தில் சில நாட்களுக்கு சிறு சிறு காட்சிகள் தான் கொடுப்பார்கள். அப்போது தான் அனைவரிடமும் நமக்கு இயல்பான நிலை வரும். ஆனால், ‘தம்பி’ படத்தில் எனக்கு முதல் நாள் படப்பிடிப்பே டூயட் பாடல் தான். அதுவும் உதட்டோடு பதிக்கும் முத்தக் காட்சி என்றதும் சிறுது பதட்டமாக இருந்தது. கார்த்தியை பார்த்ததும் இவரைப் பார்த்து நடிக்க வேண்டுமே, என்ற பயம் வேறு. ஆனால், கார்த்தி என்னை சமாதானப்படுத்தி இலகுவாக இருக்கும்படி கூறினார். முதலில் பாடலை கேட்கும்போது பதட்டமாக இருக்கும். இப்போது நன்றாக இருக்கிறது என்று தோன்றுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கார்த்தி முதல் முறையாக லில் டூ லிப் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...