விஜய் தனது 64 வது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ‘கைதி’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ககர்நாட மாநிலம் சிவமோகாவில் நடைபெற்று வருகிறது. இதனால் விஜய் தங்கியிருக்கும் சிவமோகா ஓட்டலில் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
விஜயும் ரசிகர்களை ஏமாற்றாமல், தினமும் காலை மற்றும் மாலை என்று ஓட்டல் வெளியே வந்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார். இதனால் சிவமோகா மாவட்டமே பரபரப்பாக இருக்கிறது.
இந்த நிலையில், இன்று விஜயை காண சிவமோகா ஓட்டல் வாசலில் ஏராளமான ரசிகர்கள் குவிந்து விட்டார்கள். இதையடுத்து, ஓட்டலுக்கு வெளியே வந்த விஜய், அப்போது மாலையுன் நின்றுக் கொண்டிருந்த ஒரு ரசிகர அருகே வந்து, தலை குணிந்து மாலையை ஏற்றுக் கொண்டார். அவரது கழுத்தில் மாலை போட்ட அந்த ரசிகர், உற்சாகத்தில் “தெய்வமே...தெய்வமே...” என்று கத்த, ஒட்டு மொத்த ரசிகர்களும் உற்சாகமடைந்தார்கள்.
விஜயின் இத்தகைய நடவடிக்கை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததோடு, அவர்களை உற்சாகமடையவும் செய்திருக்கிறது.
இதோ அந்த வீடியோ,
மாலையுடன் வந்த ரசிகரை மகிழ்வித்த #விஜய்
— CinemaInbox (@CinemaInbox) December 18, 2019
Today's Exclusive Video of #Thalapathy #Vijay 😍😍 @Thalapathy64Off
#Thalapathy64 @VijayFansTrends @VijayFansClub @VijayFansUK @vijayfc @VijayFansWorlds @VijayFansWorlds pic.twitter.com/i1DF1QYqQg
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...