Latest News :

ஆபாசப் படத்தில் சர்ச்சை நடிகை ஷாலு ஷம்மு!
Wednesday December-18 2019

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. அப்படத்தின் மூலம் சற்று பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகர்களுக்கு ஜோடியாகவும், ஹீரோயின்களுக்கு தோழியாகவும் நடித்து வந்தார். 

 

இதற்கிடையே, ஆபசமாக நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டதன் மூலம் வைரலான ஷாலு ஷம்மு, அவ்வபோது தனது புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தவர், திடீரென்று இயக்குநர் ஒருவர் மீது செக்ஸ் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

முன்னணி நடிகர் ஒருவரை வைத்து படம் இயக்கும் இயக்குநர் ஒருவர், தனது படத்தில் நடிக்க வேண்டும், என்றால் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துக் கொள்ள வேண்டும், என்று தனது உதவி இயக்குநர் மூலமாக ஷாலுவிடம் சொல்லியிருக்கிறார். இந்த தகவலை ஷாலு, பேட்டி ஒன்றில் கூற, ஒட்டு மொத்த கோலிவுட்டின் பார்வையும் அவர் மீது தான் விழுந்தது.

 

இது தொடர்பாக சில ஊடகங்களுக்கு ஷாலு ஷம்மு தொடர்ந்து பேட்டி கொடுக்க விஷயம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதேபோல், தனது ஆபாசமான நடனத்திற்கும் ஷாலு விளக்கம் அளித்திருந்தார்.

 

இந்த நிலையில், ஷாலு ஷம்மு ஆபாசப் படம் ஒன்றில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

கடந்த ஆண்டு வெளியான ‘இருட்டு அறை முரட்டு குத்து’ என்ற அடல்ட் காமெடி படத்தின் இரண்டாம் பாகத்தை அப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ என்ற தலைப்பில் இயக்குவதோடு, அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்த படத்தில் தான் ஷாலு ஷம்மு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

 

கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாகவு பல எதிர்ப்புகளை எதிர்கொண்டதோடு, சினிமா பிரபலங்களின் கண்டனத்திற்கும் உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6004

’மாரீசன்’ படத்தின் டிரைலர் வெளியானது!
Tuesday July-15 2025

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்'  திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இப்போது சினிமா உண்மையிலேயே மிக மோசமாக இருக்கிறது - ஆர்.வி.உதயகுமார் கவலை
Tuesday July-15 2025

எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...

சிம்புவின் சக்திவேல் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து தான் நடித்தேன் - நடிகர் டீஜே
Tuesday July-15 2025

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...

Recent Gallery