’பிகில்’ படத்தை தொடர்ந்து விஜய் ‘கைதி’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜயின் 64 வது படமான இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம், சிவமோகா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, விஜயின் 65 வது படம் குறித்த தகவல் தற்போது பரவுவதை தொடர்ந்து, அப்படத்தை இயக்கப் போகும் இயக்குநர், என்று பல இயக்குநர்களின் பெயர்கள் அவ்வபோது உலா வருகிறது. அந்த பெயர்களில் இயக்குநர் வெற்றி மாறனும் ஒருவர்.
தனுஷை வைத்து ‘அசுரன்’ மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா, விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், நடிகர் விஜய் தரப்பு வெற்றிமாறனை தொடர்புக் கொண்டு விஜயின் விருப்பத்தை தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்க இருக்கும் வெற்றிமாறன், விஜயின் 65 அது படத்தையும் இயக்க இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இது குறித்து விஜய் தரப்பு எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை என்றாலும், வெற்றிமாறன் விஜயிடம் கதை சொல்லியதாக பேட்டிகளில் கூறி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 1999 ஆம் ஆண்டு விஜய்க்கு இயக்குநர் வெற்றிமாறன் ஒரு கதை சொல்ல, அவரோ சில காரணங்களுக்காக அந்த கதையை நிராகரித்து விட்டாராம். அதன் பிறகு, சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு கதை சொல்லியிருக்கும் வெற்றிமாறன், இந்த முறை விஜயை வைத்து படம் செய்வது உறுதி என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...