ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான பரத், ‘காதல்’ படம் மூலம் ஹீரோவாகி பிரபலமடைந்தார். இடையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், அவரது படங்கள் பல எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால் வாய்ப்புகள் குறைந்தது.
இதனை தொடர்ந்து சில இந்தி படங்களில் நடித்த பரத் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கினார். அதன்படி ‘கடுகு’ படத்தில் வில்லத்தனம் கலந்த கேரக்டர் ரோலில் அவர் நடித்தார். ஆனால், அப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மேலும், பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘பொட்டு’, ‘கடைசி பெஞ்ச் கார்த்திக்’ ஆகிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால், பரத் அடியாளாகியுள்ளார். ஆம், மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ படத்தில் மெயின் வில்லனான எஸ்.ஜே.சூர்யாவுக்கு பரத் தான் அடியாளாம். எஸ்.ஜே.சூர்யா போடும் திட்டங்களை செயல்படுத்தும் அடியாளாக பரத் நடித்திருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்’ தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...