தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் இருவரது படங்களும் வசூலில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இவர்களது படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு மட்டும் பண்டிகை அல்ல, சினிமாத் துறைக்கே பண்டிகை போல தான். அதனால், தான் எந்த விஷயமாக இருந்தாலும், இருவரையும் ஒப்பிட்டு பார்க்கிறார்கள்.
மேலும், இருவரது படங்கள் வெளியாவதற்கு முன்பாக அப்படங்களின் பஸ்ட் லுக், டிரைலர் டீசர் உள்ளிட்ட பல விஷயங்களில் மக்களிடம் யார் அதிகமாக ரீச் ஆகிறார்கள், என்பதையும் கணித்து, அதையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. பல்வேறு தலைப்புகளில் பட்டியல்களை வெளியிட்டு வரும் போர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியல்களில் 100 பிரபலங்கள் என்ற தலைப்பில் வெளியாகும் பட்டியல் மிக முக்கியமானதாகும். இந்த பட்டியலில் சினிமா பிரபலங்கள் மட்டும் இன்று விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல பிரபலங்கள் இடம் பெறுவதுண்டு.
100 பேர்களில், யார் மக்களிடம் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள், என்று வரிசைப்படுத்தி வெளியாகியுள்ள இந்த பட்டியலின் முதல் இடத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்ட விராட் கோலி இருக்கிறார். அவரை தொடர்ந்து இரண்டு, மூன்று என்ற இடங்களில் சில பாலிவுட் நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
நம் தமிழ் திரையுலைச் சேர்ந்த பிரபலங்களில், ரஜினிகாந்த் 13 வது இடத்திலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 16 வது இடத்திலும் உள்ளார்கள். நடிகர் கமல்ஹாசன் 56 வது இடத்திலும், இயக்குநர் ஷங்கர் 55 வது இடத்தை பிடித்திருக்கிறார். நடிகர் தனுஷ் 64 வது இடத்தில் இருக்கிறார். இயக்குநர் சிவா 80 வது இடத்திலும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 84 வது இடத்திலும் உள்ளார்கள்.
ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது விஜய் மற்றும் அஜித் தான். அஜித் 52 வது இடத்தில் உள்ளார். விஜய் 47 வது இடத்தை பிடித்து அஜித்தை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...