தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் காமெடி நடிகர்களில் ஒருவர் முன்னணியில் இருப்பார்கள். ஆனால், எத்தனை பேர் முன்னணி என்ற இடத்திற்கு முன்னேறினாலும், மக்கள் மனதில் எப்போதும் இருப்பார்கள் ஒரு சிலர் தான். அந்த ஒரு சிலர்களில் வடிவேலு முக்கியமானவர்.
வைகைபுயல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் வடிவேலுவின் காமெடிக் காட்சிகள் தான் பலரை சிரிக்க வைப்பதற்கான கருவியாக பயன்படுகிறது, என்றால் அது மிகையாகாது. வடிவேலுவின் காமெடிக் காட்சிகள் சினிமாவில் மட்டும் அல்லாமல், இணையதளங்களிலும் வைரலாகி பல ரூபத்தில் நம்மை அவ்வபோது சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வடிவேலு என்ற நடிகர் இல்லாமல், எந்த அரசியல் நையாண்டியும், மீம்ஸும், மிமிக்ரி நிகழ்ச்சிகளும் இல்லை என்பது போல, அனைத்திலும் அடிவேலு இருக்கிறார்.
இதற்கிடையே, ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தினால் ஏற்பட்ட பிரச்சினையால் வடிவேலு நடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், அந்த தடை தற்போது நீக்கப்பட்டு விட்டதாகவும், அவர் கமல்ஹாசலின் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், மக்களிடம் அதிகமாக பிரபலமாகி வரும் வெப் சீரிஸிலும் வடிவேலு நடிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெப் சீரிஸில் நடிப்பது குறித்து விளக்கம் அளித்துள்ள வடிவேலு, நடித்தால் சினிமாவில் மட்டுமே நடிப்பேன், அதை தவிர வேறு எதிலும் நடிக்க மாட்டேன். குறிப்பாக வெப் சீரிஸில் என்றுமே நடிக்க மாட்டேன், என்று கூறியிருக்கிறார்.
வடிவேலுவின் இந்த முடிவால், வெப் சீரிஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். ஆபாசம் மட்டுமே நிறைந்த வெப் சீரிஸில் வடிவேலு போன்ற காமெடி நடிகர்கள் எண்ட்ரியாவதை மக்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த நிலையில், வடிவேலுவின் முடிவு அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...